பஸ்ஸில் தீ விபத்து: 73 பேர் பலி: ஆப்கானிஸ்தானில் சோகம்!

ஆப்கானிஸ்தானில் புலம் பெயர்ந்தோரை ஏற்றி சென்ற பஸ்ஸில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிறுவர்கள் உட்பட 73 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்கானிஸ்தானின் மேற்கு ஹெராத் மாகாணத்தில் ஒரு பயணிகள் பஸ் புலம் பெயர்ந்தோரை ஏற்றி சென்று கொண்டிருந்தது.

அப்போது, சாரதியின் கட்டுபாட்டை இழந்த பஸ் ஒரு லாரி மற்றும் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 குழந்தைகள் உட்பட 73 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

ஈரான் அகதிகளை ஏற்றிக் கொண்டு காபூல் நகரை நோக்கி பஸ் சென்ற போது, இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்பது விசாரணையில் தெரியவந்தது.

இந்த விபத்து சமீபத்திய வரலாற்றில் மிகவும் மோசமான போக்குவரத்து பேரழிவுகளில் ஒன்றாகும் என மாகாண அரசாங்க செய்தி தொடர்பாளர் அஹ்மதுல்லா முத்தகி தெரிவித்தார்.

Related Articles

Latest Articles