ரணில் கைது செய்யப்பட்டால் சர்வதேசம் அமைதி காக்காது!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்வதற்கு அரசாங்கம் முற்பட்டால் கடும் சர்வதேச நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளராக பதவி வகித்தவரும், புதிய மக்கள் முன்னணியின் தலைவருமான சுகீஸ்வர பண்டார தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (22) விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது பற்றி கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த சுகீஸ்வர பண்டார கூறியவை வருமாறு,

” கைது செய்தல், அரசியல் பழிவாங்கல் என்பவற்றைத்தவிர தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வேறு எதையும் செய்யவில்லை.
ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்தால் என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம். சர்வதேச ரீதியில் அரசாங்கத்துக்கு ஏற்படும் அழுத்தங்களையும் தெளிவாக பார்த்துக்கொள்ள முடியும்.
எனவே, ரணில் விக்கிரமசிங்க சென்றது தனிப்பட்ட விஜயமா, உத்தியோகப்பூர்வ விஜயமா என்பது விசாரணைகள்மூலம் தெரியவரும்.” – என்றார்.

Related Articles

Latest Articles