போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யாவுக்கு அமெரிக்கா மீண்டும் காலக்கெடு!

உக்ரைனுடனான போரை இரண்டு வாரங்களுக்குள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்; இல்லாவிட்டால் ரஷ்யா மீது மிகப் பெரிய பொருளாதார தடைகள் அல்லது வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, 2022 இல் ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைன் சர்வதேச ராணுவ அமைப்பான ‘நேட்டோ’வில் இணைவதற்கு எதிராக இந்தப் போரை ரஷ்யா துவக்கியது.

மூன்றாண்டுகளை கடந்தும் நடந்து வரும் இந்த போரில், உக்ரைனுக்காக ஆயுதங்களை அமெரிக்கா வழங்கிவந்தது.
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப், இந்தாண்டு ஜனவரியில் பொறுப்புக்கு வந்ததில் இருந்து, ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

சமீபத்தில் இது குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை, அமெரிக்காவின் அலாஸ்காவில் நேரில் சந்தித்து விவாதித்தார்.
பின், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களையும் நேரில் அழைத்து பேசினார்.
இதனால் விரைவில் போர் முடிவுக்கு வரும் என கருதப்பட்ட நிலையில், மேற்கு உக்ரைனின் முகாசெவோ பகுதியில் ரஷ்யா நேற்று தாக்குதல் நடத்தியது. இதில், அங்கு செயல்பட்டு வந்த அமெரிக்க மின்னணு தொழிற்சாலை வெடித்துச் சிதறியது.

இந்நிலையில் நேற்று வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ட்ரம்ப்,

‘உக்ரைனில் உள்ள அமெரிக்க தொழிற்சாலை மீதான ரஷ்யாவின் தாக்குதலை நான் ரசிக்கவில்லை. போர் தொடர்பான எந்த விஷயத்தையும் நான் விரும்புவதில்லை. ரஷ்யா இரண்டு வாரங்களுக்குள் உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம் செய்ய வேண்டும்.

விரைவில் முடிவு இல்லையெனில், அவர்களுக்கு பெரிய அளவிலான பொருளாதாரத் தடைகள் அல்லது வரி விதிப்போம். ரஷ்யா இதை பொருட்படுத்தாது என்று சிலர் நினைக்கின்றனர்.

ஆனால் அவர்கள் இதை மிகவும் கவனத்தில் கொள்வர் என்று எதிர்பார்க்கிறேன்.
உக் ரைனின் அமைதிக்காகவும், உலகின் நலனுக்காகவும் இந்த நடவடிக்கையை எடுப்பேன். இந்த போ ரை விரைவாக முடிவுக்கு கொண்டு வருவேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles