சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!

” நாடாளுமன்றத்தில் எதிரணி உறுப்பினர்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும்.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார்.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் சபாநாயகர் தனது நிலைப்பாட்டை நேற்று தெளிவுபடுத்திய பின்னரே அவருக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

” இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் தற்போதுதான் முதன்முறையாக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்நாடாளுமன்றத்தில் 1978 இல் எதிர்க்கட்சி தலைவர் ஒருவருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தில் உப ஜனாதிபதிக்கு எதிராகக்கூட இவ்வாறு நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

எனவே, நாடாளுமன்றத்தில் எதிரணிகளின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்காவிட்டால் சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர நேரிடும்.
ஆகவே தனது முடிவை சபாநாயகர் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.” – எனவும் ரஞ்சித் மத்தும பண்டார வலியுறுத்தினார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles