பொலிஸாரால் அகற்றப்பட்டது திலீபனின் உருவச்சிலை

யாழ். நல்லூரில் நிறுவப்பட்டிருந்த தியாகதீபம் திலீபனின் உருவச் சிலை காவல்துறையினரால் பெயர்த்து செல்லப்பட்டுள்ளது.

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் கடந்த 15ஆம் திகதி, தியாக தீபம் திலீபனின் வெண்கலச் சிலை அமைக்கப்பட்டு 12 நாட்களாக நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் நேற்று நினைவேந்தல் நிறைவடைந்த நிலையில் இன்று அதிகாலை காவல்துறையினர், தியாக தீபம் திலீபனின் உருவச் சிலையை எடுத்துச் சென்றுள்ளனர்.

காவல்துறையின் இந்த நடவடிக்கை தமிழ் மக்களிடையே கடும் எதிர்ப்பைத் தோற்றுவித்துள்ளது.

எந்தவிதமான முன்னறிவித்தலும் வழங்காமல் 15க்கும் மேற்பட்ட பொலிஸார் வாகனங்களில் வந்து, சப்பாத்து கால்களுடன் உள்ளே சென்று பலவந்தமாக அந்த சிலையை அகற்றிச் சென்றுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

(தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பாகும். எனவே, அவ்வமைப்பின் கொடிகளை காட்சிப்படுத்தல், பாடல்களை ஒலிபரப்புதல், அவ்வமைப்பினருக்கு நினைவேந்தல் நடத்துதல் என்பன தண்டனைக்குரிய குற்றமாகும்.

திலீபனும் பயங்கரவாதிகள் பட்டியலில் இருப்பதால், சிலை அகற்றப்பட்டுள்ளது என பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.)

 

Related Articles

Latest Articles