மாகாணசபைத் தேர்தலை இயலுமானவரை விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
மாகாணசபைத் தேர்தல் அடுத்த வருடம் நடத்தப்படுமா என எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மாகாணசபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்பட வேண்டும். எல்லை நிர்ணய பிரச்சினையால்தான் இது விடயத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஒன்று பழைய முறைமைக்கு செல்ல வேண்டும். இல்லையேல் புதிய முறைமைக்கு செல்ல வேண்டும்.
இது தொடர்பில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நடவடிக்கை எடுக்கப்படும். இயலுமானவரை விரைவில் தேர்தலை நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.” – என்றார்.










