Industry Expo 2025 கண்காட்சியை ஜனாதிபதி பார்வையிட்டார்

 

கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (19) காலை நடைபெற்ற Industry Expo 2025 கண்காட்சியை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பார்வையிட்டார்.

கண்காட்சி கூடங்களைப் பார்வையிட்ட ஜனாதிபதி, தொழில்முனைவோர் மற்றும் கைத்தொழில்துறையினருடன் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டார்.

ஏற்றுமதி சார்ந்த உற்பத்தி பொருளாதாரத்தை நோக்கி நாட்டை வழிநடத்தும் நோக்கில், முழு கைத்தொழில்துறயையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபை என்பவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட Industry Expo 2025 கண்காட்சி செப்டெம்பர் 18-21 வரை பண்டாரநாயக்க ஞபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுகிறது.

கைத்தொழில்துறை வளர்ச்சியில் நாடு எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு தீர்வு காண்பதே இந்தக் கண்காட்சியின் பிரதான நோக்கமாகும்.

நாட்டின் தேசிய உற்பத்தியை மேம்படுத்துவதற்குப் பலம்கொடுக்கும் பிரதானமானவர்களை தேசிய அளவில் அறிமுகப்படுத்துதல், நாட்டின் வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பு பொதுமக்கள் மற்றும் பொறுப்புள்ள தரப்பினருக்கு முன்பாக கௌரவித்தல், தொழில்முனைவோர் சமூகம் குறித்து மக்களிடையே சாதகமான மனப்பாங்கை உருவாக்க இதன் ஊடாக எதிர்பார்க்கப்படுகிறது.

இது மக்களிடையே தொழில்முனைவில் ஆர்வத்தை உருவாக்கும், கைத்தொழிற்துறையினருக்கு கைத்தொழில்களைத் தொடங்கவும் விரிவுபடுத்தவும் வாய்ப்புகளை அறிமுகப்படுத்தவும் அதற்கான உந்துதலை வழங்கவும் இதன் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சந்தைசார்ந்த உறவுகளை ஊக்குவிப்பதன் மூலம், அனைத்து தரப்பினரும் உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு புதிய பிரவேசத்தைத் திறக்கவும், போட்டி சந்தையை மதிப்பிடவும், தங்களின் பலத்தையும் பலவீனங்களையும் அடையாளம் காணவும், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் அறிவையும் நடைமுறை அனுபவத்தையும் பெறவும் Industry Expo 2025 வாய்ப்பாக அமையும்.

இது தவிர, கைத்தொழில் அபிவிருத்திக்காக ஆதரவு வழங்கும் நிறுவன கட்டமைப்பை அடையாளம் காணவும், அதன் மூலம் பெறக்கூடிய நன்மைகளைப் பற்றி அறிந்து கொள்ளவும் தொழில்முனைவோர் மற்றும் கைத்தொழில்துறையினருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

நாட்டின் 25 கைத்தொழில்துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த கண்காட்சியில் நாடு முழுவதிலுமுள்ள கைத்தொழில்துறையினரின் 450 கண்காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு கண்காட்சியில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், அரச மற்றும் தனியார் துறைகளால் சமர்ப்பிக்கப்படும் புத்தாக்க வலயம் கண்காட்சியல் விசேட கவனத்தைப் பெற்றுள்ளது. பாடசாலை தொழில்முனைவோர் வட்டத் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களின் தயாரிப்புகளைக் கொண்ட கண்காட்சி அரங்குகளும் இந்த ஆண்டு Industry Expo 2025 கண்காட்சியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தேசிய பொறியியல் கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி மத்திய நிலையத்தினால் (NERD) ஒரு சேவை கூடமும், கைத்தொழில்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக அனைத்து அரச மற்றும் வங்கி நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ONE STOP service கூடமும் இந்த ஆண்டு கண்காட்சியில் சேர்க்கப்பட்டுள்ளன.

கைத்தொழில்துறை உரிமையாளர்களுக்கு அவசியமான இயந்திரங்கள், பொதியிடல் பொருட்கள் போன்றவற்றை உள்ளடக்கிய கைத்தொழில்துறை Industry Expo 2025 கண்காட்சியில் விநியோகஸ்தர்களைச் சந்திக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles