” கொழும்பில் நடந்தது ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு அல்ல. அது அலிபாபா மற்றும் 40 திருடர்களின் மாநாடாகும்.” – என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விமர்சித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு விமர்சித்தார்.
” தமது ஆட்சிகாலத்தில் இந்நாட்டை நாசமாக்கியவர்கள், கொலைக்காரர்கள் மற்றும் கொள்ளையர்கள்கூடிய மாநாடுதான் அது. மக்களால் புறக்கணிக்கப்பட்ட மற்றும் மக்கள் வெறுக்கின்ற அரசியல்வாதிகள்தான் அதில் பங்கேற்றனர். வெட்கம் இன்றி மலையக தலைவர்களும் பங்கேற்றிருந்தனர்.” – எனவும் பிரதி அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.
நாட்டை நாசமாக்கிய இந்த கும்பலை மக்கள் ஒருபோதும் ஆட்சிக்கு கொண்டுவரமாட்டார்கள் என பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.










