நோபல் பரிசு வேண்டுமானால் காசா போரை நிறுத்தவும்: ட்ரம்பிடம் பிரான்ஸ் ஜனாதிபதி வலியுறுத்து!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உண்மையிலேயே அமைதிக்கான நோபல் பரிசை வெல்ல விரும்பினால், அவர் காசாவில் நடைபெறும் போரை நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்தார்.

“காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுக்கும் அதிகாரம் ட்ரம்ப்புக்கு மட்டுமே உள்ளது. இந்த மோதலில் ஏதாவது செய்யக்கூடிய ஒருவர் இருக்கிறார் என்றால், அவர் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மட்டுமே.

அவர் எங்களை விட இப்போரை நிறுத்த அதிகமாக செய்ய முடிவதற்கான காரணம் என்னவென்றால், காசாவில் போரை நடத்துவதற்கான ஆயுதங்களை நாங்கள் வழங்குவதில்லை, அமெரிக்காதான் வழங்குகிறது.” – எனவும் பிரான்ஸ் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஐநா பொதுசபையில் நேற்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பேசுகையில், ‘எனக்கு அமைதி வேண்டும். ஏழு மோதல்களை நிறுத்தினேன்’ என மீண்டும் கருத்து வெளியிட்டார்.

இந்நிலையிலேயே அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வேண்டும் என்றால், காசாவில் நடக்கும் போரை நிறுத்தினால் மட்டுமே அமைதிக்கான நோபல் பரிசு சாத்தியமாகும்” என்று மேக்ரான் கூறினார்.

கம்போடியா, இஸ்ரேல் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் போர்நிறுத்தங்களை உருவாக்கியதற்காக ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles