பாடசாலை விடுமுறை மேலும் ஒருவாரம் நீடிப்பு!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு வாரகால விடுமுறை மேலும் ஒரு வார காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய பாடசாலைகளை மீண்டும் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார். தரம் 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்பு மாணவர்களே அன்றைய தினம் வரவேண்டும். ஏனைய வகுப்புகள் ஆகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டில் கடந்த வாரம் முதல் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்ததைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் கடந்த திங்கட்கிழமை முதல் நேற்று வரையில் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து கற்றல் செயற்பாடுகளை மீண்டும் முன்னெடுப்பதற்கான கால எல்லை மற்றும் தினம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக சுகாதார அமைச்சிடம் கல்வி அமைச்சு கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles