இபோச பஸ் சாரதியொருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நல்லத்தண்ணி பகுதியில் உள்ள பஸ் நிலைய தங்குமிட விடுதியில் வைத்தே, நல்லத்தண்ணி பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய கடந்த சில மாதங்களாக சந்தேக நபர், கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு கைதாகியுள்ளார்.
போதை வில்லைகள் மற்றும் ஹேரோயின் 77 மில்லி கிராம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
இவர் இபோச ஹட்டன் கிளையை சேர்ந்தவர் என தெரியவருகின்றது.
சந்தேக நபரை இன்று நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்
 
		 
                                    









