ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி: ட்ரம்ப் உத்தரவு!

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத உடனடி வரிவிதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போருக்கு இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குவதே காரணம் எனக் கூறியட்ரம்ப், இந்தியாவுக்கு முதலில் 25 சதவிகித வரியும் பின்னர், கூடுதல் 25 சதவிகித வரிவிதித்தார்.

டிரம்ப்பின் நடவடிக்கையை மீறிய இந்தியா, சீனாவுக்கு கூடுதலாக 500 சதவிகித வரி விதிப்பு குறித்த சட்டமூலத்துக்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த நிலையில், ஈரான் தொடரும் போராட்டங்கள், பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த அரசுக்கு உள்ள அழுத்தம் அதிகரித்துள்ளது.

அமெரிக்காவுக்கு எதிராகப் பேசிவந்த வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அந்த நாட்டுக்குள்ளேயே நுழைந்து அமெரிக்க ராணுவத்தினர் கைது செய்த சம்பவம் ஈரான் போராட்டக்காரர்களுக்கு மேலும் உத்வேகம் அளித்துள்ளது.

இந்தச் சூழலில், போராட்டக்காரர்கள் மீது ஈரான் அரசு மேற்கொள்ளும் அடக்குமுறைக்கு தண்டனையாக அந்த நாட்டின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அ டிரம்ப் எச்சரித்த நிலையில், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளுக்கும் 25 சதவிகித உடனடி வரிவிதித்து உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து ஜனாதிபதி டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில், “ஈரானின் இஸ்லாமிய குடியரசுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய உடனடியாக 25 சதவிகித வரிவிதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அமுலுக்கு வந்த இந்த வரிவிதிப்பானது இறுதியானது மற்றும் உறுதியானது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வரிவிதிப்பால், இந்தியா, துருக்கி, சீனா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் கடுமையாகப் பாதிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles