உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகல்: விஞ்ஞானிகள், மருத்துவர்கள் கவலை!

உலக சுகா​தார அமைப்​பில் இருந்து அமெரிக்கா நேற்று அதி​காரப்​பூர்​வ​மாக வில​கியது. இதனால் சர்​வ​தேச அளவில் பெரும் சர்ச்சை ஏற்​பட்​டுள்​ளது.

ஐக்​கிய நாடு​கள் சபை​யின் அங்​க​மாக உலக சுகா​தார அமைப்பு செயல்​படு​கிறது. இதன் தலைமை அலு​வல​கம் சுவிட்சர்​லாந்​தின் ஜெனீவா நகரில் உள்ளது.

உலகள​வில் சுகா​தா​ரம் தொடர்​பான பணி​களை இந்த அமைப்பு மேற்​கொள்​கிறது. உலக சுகா​தார அமைப்​பில் பெரும்​பாலான நாடு​கள் உறுப்பின​ராக உள்​ளன.

இந்​நிலை​யில், உலக சுகாதார அமைப்​பில் இருந்து அமெரிக்கா நேற்று அதி​காரப்​பூர்​வ​மாக வில​கியது.

சுகா​தா​ரம் தொடர்பான தகவல்​கள், அவற்றை பகிர்ந்து கொள்​ளுதல், அதன் மூலம் நோய் பரவல் தொடர்​பான எச்​சரிக்கை வெளி​யிடு​தல் போன்ற நடவடிக்​கைகளை உலக சுகா​தார அமைப்​புடன் நிறுத்​திக் கொண்​ட​தாக அமெரிக்க அதி​காரி​கள் நேற்று தெரி​வித்​தனர்.

இதன் மூலம் இந்த அமைப்​புடன் அமெரிக்கா​வுக்கு இருந்து வந்த 78 ஆண்டு தொடர்பு முடிவுக்கு வந்​துள்​ளது.

இதற்​கிடை​யில், கடந்த 2024, 2025-ம் ஆண்​டு​களுக்​கான தொகை 130 மில்​லியன் டாலரை அமெரிக்க வழங்க வேண்டியுள்​ளது என்று உலக சுகா​தார அமைப்பு தெரி​வித்​துள்​ளது.

அமெரிக்​கா​வின் இந்த முடிவால் உலகள​வில் ஏற்​படும் நோய் பரவல், விஞ்​ஞானிகளின் பங்​களிப்​பு, மருந்து நிறுவனங்​கள் தடுப்​பூசி தயாரிப்​பது போன்ற பணி​கள் கடுமை​யாக பாதிக்​கும் என்று ஜார்ஜ் டவுண் பல்​கலைக்​கழக பொது சுகா​தார சட்ட நிபுணர் லாரன்ஸ் கோஸ்​டின் கவலை தெரி​வித்​துள்​ளார்.

என்​னுடைய வாழ்நாளி​லேயே மிக பேரழி​வான முடிவை அமெரிக்க ட்ரம்ப் எடுத்​துள்​ளார் என்று லாரன்ஸ் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

இத்​தனைக்​கும் உலக சுகா​தார அமைப்பை தொடங்​கும் முயற்​சியை முன்​னெடுத்​தது அமெரிக்​கா​தான். அதே​போல், இந்த அமைப்​புக்கு அதிக நிதி​யுதவி வழங்​கு​வதும் அமெரிக்​கா​தான். ஆண்​டுக்கு சராசரி​யாக 111 மில்​லியன் டாலரை இந்த அமைப்​புக்கு அமெரிக்கா வழங்​கு​கிறது.

அத்​துடன், மருத்​து​வர்​கள், விஞ்​ஞானிகள், சுகா​தா​ரத் துறை பணி​யாளர்​களை​யும் உலக சுகாதார அமைப்​பின் பணி​களுக்கு அமெரிக்கா ஈடு​படுத்​தி​யது. ஆனால், தற்​போது அமெரிக்கா வில​கியது, சர்​வ​தேச அளவில் புதி​தாக நோய் பரவல் ஏற்​பட்​டால் பெரும் பாதிப்பை ஏற்​படுத்​தும் என்று கூறுகின்​றனர்.

இதற்​கிடை​யில், கோவிட்​-19 கரோனா தொற்​றின் போது, அமெரிக்கா​வுக்கு முன்​கூட்​டியே சரி​யான தகவல்​களை அளிக்கவில்​லை, சீனா​வுக்கு ஆதர​வாக செயல்​படு​கிறது, தவறான தகவல்​களை வெளி​யிடு​கிறது போன்ற குற்​றச்​சாட்​டு​களை அமெரிக்கா கூறியது குறிப்​பிடத்​தக்​கது.

அமெரிக்​கா​வின் வில​கலால் உலகள​வில் போலியோ ஒழிப்​பு, குழந்​தைகள் உடல்​நலம், புதிய வைரஸ் பரவி​னால் உடனடி​யாக ஆராய்ச்சி மேற்​கொண்டு தடுப்​பூசி தயாரித்​தல் போன்ற பணி​கள் பாதிக்​கப்​படும் என்று நிபுணர்​கள் அஞ்​சுகின்​றனர்.

எனவே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ​ தனது முடிவை மறு​பரிசீலனை செய்​ய வேண்​டும்​ என்​று வலி​யுறு​த்​தி வருகின்​றனர்​.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles