ஷிரந்தியிடம் FCID விசாரணை! நாமல் CID யில் ஆஜர்!

“ ராஜபக்சக்களை சிறையில் அடைத்து, பிரச்சினைகளை திசை திருப்புவதற்கு அரசாங்கம் முற்படுகின்றது.” – என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் இன்று (03) முன்னிலையானார்.

அவருடன் மஹிந்த ராஜபக்சவும் வருகை தந்திருந்தார்.
வளாகத்தில் ஆதரவாளர்களும் திரண்டிருந்தனர். ஷிரந்திக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பட்டன. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

இதன்போதே மஹிந்தவின் ஊடகப் பேச்சாளர் மேற்கண்டவாறு கூறினார்.

“சிரிலிய கணக்கு தொடர்பிலேயே விசாரணை நடக்கின்றது.
முதல் பெண்மணியாக இருந்தபோது அநாதை குழந்தைகளுக்கு அவர் கல்வி வழங்கியவர். இதனை அவர் பிரச்சாரத்துக்காக பயன்படுத்தவில்லை.

பாலர் பாடசாலைகளையும் ஆரம்பித்தார். இவ்வாறு கல்விக்காக அவர் செய்த சேவை வெளியில் தெரியவரவில்லை. எனினும், உண்மை என்னவென்பது நீதிமன்றம் ஊடாக தெரியவரும்.” – என்றார் மனோ கமகே.

அதேவேளை, நாமல் ராஜபக்ச குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார். இருவரிடமும் விசாரணைகள் நடத்தப்பட்டுவருகின்றன.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles