ICC T20 World Cup தொடரில் நடைபெற்ற பரபரப்பான லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் அணி, கனடா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து முக்கியமான வெற்றியை பதிவு செய்துள்ளது.
இன்று (13) மாலை நடைபெற்ற இந்த 19-வது லீக் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற கனடா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
முதலில் களமிறங்கிய கனடா அணிக்கு UAE பந்துவீச்சாளர்கள் கடும் சவாலை ஏற்படுத்தினர். தொடர்ந்து சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்த கனடா அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
UAE அணியின் பந்துவீச்சாளர் ஜுனைத் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி கனடா அணியின் முன்னேற்றத்தை தடுத்தார்.
151 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய UAE அணி நிதானமாகவும் திட்டமிட்டும் ஆடியது. ஆரம்பத்தில் சில விக்கெட்டுகளை இழந்தபோதிலும், நடுப்பகுதியில் வீரர்கள் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றிக்குக் கொண்டு சென்றனர்.
இறுதியில் UAE அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியதன் மூலம், இந்த தொடரில் தங்களது திறமையை மீண்டும் நிரூபித்துள்ளது.










