ஈரான்மீது தாக்குதல் நடத்துவது ஆபத்து: ட்ரம்ப் மறுப்பு!

ஈரான் மீது தாக்குதல் நடத்துவது ஆபத்தை அதிகரிக்கும் என அமெரிக்காவின் கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் எச்சரித்ததாக வெளியான தகவலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சமூக ஊடக பதிவில்,

‘‘ஈரானுடன் நாம் போருக்குச் செல்வதை ஜெனரல் டேனியல் கெய்ன் எதிர்க்கிறார் என்று போலி செய்தி ஊடகங்களில் இருந்து பல கதைகள் பரவி வருகின்றன. இது 100% தவறானது.

நம் அனைவரையும் போலவே ஜெனரல் கெய்ன் போரை பார்க்க விரும்பவில்லை. ஆனால், ஈரானுக்கு எதிராக ராணுவ ரீதியாக நடவடிக்கை எடுப்பது என்று ஒரு முடிவு எடுக்கப்பட்டால், அது எளிதில் வெல்லக்கூடிய ஒன்றாக இருக்கும் என்பதே அவரது கருத்து.

ஈரானின் அணுசக்தி மேம்பாட்டுக்கு எதிராக நடத்தப்பட்ட ‘மிட்நைட் ஹேமர்’ என்ற தாக்குதலுக்கு பொறுப்பேற்று செயல்பட்டவர் ஜெனரல் கெய்ன். எனவே அவருக்கு ஈரானை நன்கு தெரியும்.

ஜெனரல் கெய்ன் ஒரு சிறந்த போராளி. உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராணுவத்தை வழிநடத்துபவர். அவர் ஈரான் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என கூறவில்லை. அவருக்கு, எப்படி வெற்றி பெறுவது என்ற ஒன்று மட்டுமே தெரியும்.

ஈரானுடனான போர் சாத்தியங்கள் பற்றி எழுதப்பட்ட அனைத்தும் தவறானவை, வேண்டும் என்றே எழுதப்பட்டவை. நான்தான் முடிவெடுப்பேன். ஈரானுடன் ஓர் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

அது நடக்காவிட்டால், அது அந்த நாட்டுக்கும் மக்களுக்கும் துரதிருஷ்டவமான நாளாக இருக்கும். ஈரான் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் நல்லவர்கள். இதுபோன்ற ஒன்று அவர்களுக்கு ஒருபோதும் நடந்திருக்கக்கூடாது’’ என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

முன்னதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை வெளியிட்ட செய்தியில், வெடிமருந்து பற்றாக்குறை, நட்பு நாடுகளின் ஆதரவு இல்லாதது ஆகியவை அமெரிக்க ராணுவத்துக்கு ஆபத்தை அதிகரிக்கக்கூடும் என்று ஜெனரல் கெய்ன், வெள்ளை மாளிகை மற்றும் பென்டகனை எச்சரித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், டொனால்ட் ட்ரம்ப் இந்த செய்தியை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles