அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளமை கத்தோலிக்கத் திருச்சபை வரவேற்றுள்ளது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணை அடிப்படையிலேயே சுரேஷ் சலே நேற்று கைது செய்யப்பட்டார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட அவர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றது.
இந்நிலையிலேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து பொறுப்புக்கூறலை வலியுறுத்தி வரும் கத்தோலிக்கத் திருச்சபை , கைது நடவடிக்கையை வரவேற்றுள்ளது.
கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னான்டோ Fernando வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
“ விசாரணைகள் தொடர்கின்றன என்பதற்கான அறிகுறியாக இந்த கைது நடவடிக்கை அமைந்துள்ளது.
எங்களுக்குத் தேவையானது ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள உண்மை.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.” எனவும் அருட்தந்தை குறிப்பிட்டார்.










