பண்டாரவளை கல்வி வலயத்திற்குட்பட்ட நீட்வுட் இலக்கம.01 தமிழ் வித்தியாலயம் உள்ளிட்ட சுமார் 30 பாடசாலைகளைச் சேர்ந்த தரம் ஐந்து புலமைப் பரிசில் மாணவர்களுக்கு “பாரி வெற்றிக்கனி” நூல்கள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
யாழ்ப்பாணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பாரி அறக்கட்டளை ஏற்பாட்டில் இந்த நூல் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் மூலம் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்கு கல்வி உதவியாக “பாரி வெற்றிக்கனி” நூல்கள் வழங்கப்பட்டன.
இந்த உயரிய சமூகச் சேவையை முன்னெடுத்து வரும் பாரி அறக்கட்டளையின் நிறுவனர் திருமதி சசிவதனா விமலரஞ்சிதன் மற்றும் அதன் அதிகாரிகள், அங்கத்தவர்கள் அனைவருக்கும் கல்வி சமூகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பங்கேற்று சிறப்பித்தவர் பண்டாரவளை வலயக் கல்விப் பணிமனையின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்
க. யோகேஸ்வரன் ஆவர். மேலும், நிகழ்வை ஒருங்கிணைப்பதில் ஹப்புத்தளை இலக்கம்
01 தமிழ் வித்தியாலய அதிபர் ஜெயராஜ் அவர்கள் இணைப்பாளராக செயல்பட்டு முக்கிய பங்களிப்பை வழங்கினார்.
இந்த நிகழ்வு மூலம் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ஊக்கமும் கல்வி ஆதரவும் கிடைத்துள்ளதாக கல்வியியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
( நடராஜா மலர்வேந்தன் )
பசறை நிருபர்
