வடக்குக்கு சென்று செல்பி எடுக்கும் ஜனாதிபதி வடமாகாணசபைத் தேர்தலை நடத்தாமல் இருப்பது ஏன்?

“மஹிந்த ராஜபக்சவே போரை முன்னெடுத்தார். இதனால் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் அவர் தொடர்பில் கடும் விமர்சனம் இருந்தது. தம்மை மக்கள் விமர்சித்தபோதிலும் வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அவர் நடவடிக்கை எடுத்தார்.

எனினும், வடக்கு மக்களின் ஆதரவை பெற்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தேர்தலை நடத்தாமல் இருப்பது ஏன்? எனது கேள்வி சரிதானே?

இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

“ ஜனாதிபதி வடக்குக்கு செல்கின்றார். சுதந்திரமாக நடக்கின்றார். செல்பி எடுக்கின்றார். இது நல்ல விடயம். இதில் எவ்வித தவறும் கிடையாது.

இப்படி மக்கள் ஆதரவைப் பெற்ற ஜனாதிபதியால் ஏன் தேர்தலை நடத்த முடியாதுள்ளது.” என்றார் மனோ கணேசன்.

“மாகாணசபைத் தேர்தலை பழைய முறைமையின்கீழ் நடத்துவதற்குரிய யோசனைக்கு நாம் ஆதரவளித்தோம். எதிரணியில் இருக்கும்போது தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் அதற்கு ஆதரவளித்தார்.

எனினும், தற்போது அவர்களின் நிலைப்பாடு மாறியுள்ளது. இதற்கான காரணம் தெரியவில்லை.

மாகாணசபைத் தேர்தலை பழைய முறைமையின்கீழ் நடத்துவதற்குரிய தனிநபர் சட்டமூலம் உள்ளது. அதனை அரசாங்கம் தமது சட்டமூலமாக கொண்டுவர வேண்டும். இதற்குரிய கோரிக்கையை நாம் முன்வைப்போம்.” என்றார் மனோ கணேசன்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles