25 ஆவது நாளாக தொடரும் தாக்குதல்: ஈரானில் 208 குழந்தைகள் பலி!

மத்திய கிழக்கு போர்ச்சூழல் இன்று (24) 25ஆவது நாளாக தொடர்கின்றது.

ஈரான்மீதான தாக்குதல்கள் ஐந்து நாட்களுக்கு நிறுத்தப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தாலும், ஈரான்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

மறுபுறத்தில் இஸ்ரேல்மீது ஈரானும் ஏவுகணைத் தாக்குதல் நடத்திவருகின்றது.

இந்நிலையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஈரானில் 208 குழந்தைகள் பலியாகியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.

ஈரானின் அவசரக்கால சேவைத் துறை மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது.

போர் தொடங்கியவேளை மினாப் நகரில் உள்ள பெண்கள் பாடசாலை மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 168 சிறுமிகள் பலியாகியுள்ளனர்.

போரால் ஈரானில் 1,500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதேவேளை, இஸ்ரேல் தாக்குதலில் லெபனானிலும் குழந்தைகள் உட்பட ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

ஈரான்மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் என்பன கடந்த 28 ஆம் திகதி தாக்குதலை ஆரம்பித்திருந்தன.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles