பிரின்ஸ் சுல்தான் விமானப்படைதளம்மீது ஈரான் தாக்குதல்: 12 அமெரிக்க படையினர் காயம்!

சவூதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் 12 அமெரிக்க படையினர் காயமடைந்துள்ளனர்.

மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் இன்று 29 ஆவது நாளாக தொடர்கின்றது.

ஈரான்மீது அமெரிக்கா, இஸ்ரேல் என்பன கூட்டு இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

ஈரானும் பதிலடி கொடுத்துவருகின்றது. மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க தளங்கள்மீதும் தாக்குதல் நடத்திவருகின்றது.

இந்நிலையிலேயே சவூதியில் மேற்படி தளம் தாக்கப்பட்டுள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த நான்கு வாரங்களாக நீடித்து வரும் இந்த மோதலில், இதுவரை 13 அமெரிக்கப் படையினர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 300 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles