IPL திரு​விழா இன்று தொடக்கம்: ஆர்சிபி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பலப்பரீட்சை!

ஐபிஎல் டி 20 கிரிக்​கெட் திரு​விழா​வின் 19-வது சீசன் பெங்களூரு​வில் உள்ள எம்​.சின்​ன​சாமி மைதானத்​தில் இன்று தொடங்​கு​கிறது.

இந்​தத் தொடரில் நடப்பு சாம்பியனான ஆர்​சிபி, தலா 5 முறை பட்​டம் வென்​றுள்ள சிஎஸ்​கே, மும்பை இந்​தி​யன்​ஸ், 3 முறை கோப்​பையை கைப்​பற்றி உள்ள கொல்​கத்தா நைட் ரைடர்​ஸ், தலா ஒரு முறை வாகை சூடி​யுள்ள ராஜஸ்​தான் ராயல்​ஸ், குஜ​ராத் டைட்​டன்​ஸ், சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் ஆகிய அணிகளுடன் இது​வரை பட்​டம் வெல்​லாத டெல்லி கேப்பிடல்​ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்​ஸ், பஞ்​சாப் கிங்ஸ் ஆகிய அணி​களும் களமிறங்​கு​கின்​றன.

தொடக்க நாளான இன்று நடப்பு சாம்​பிய​னான ரஜத் பட்டிதார் தலை​மையி​லான ஆர்​சிபி அணி, முன்​னாள் சாம்​பிய​னான சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​யுடன் மோதுகிறது.

இந்த ஆட்​டம் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இரு அணி​களுமே இம்​முறை பந்துவீச்சுதுறை​யில் சற்று பலவீன​மாக உள்​ளன. முக்​கிய வீரர்​கள் இல்​லாதது இரு அணி​களுக்​கும் பின்​னடை​வாகக் கருதப்​படு​கிறது.

ஆர்​சிபி அணி கடந்த ஆண்டு சாம்​பியன் பட்​டம் வென்றதில் முக்​கிய பங்கு வகித்த வேகப்​பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசில்​வுட் காயத்​தால் அவதிப்​பட்டு வரு​கிறார். இதனால் அவர், தொடக்க போட்​டிகளில் களமிறங்குவது சந்தேகம்தான்.அதேவேளை​யில் யாஷ் தயாள் தனிப்​பட்ட காரணங்​களுக்​காக இந்த சீசனில் இருந்து முழு​மை​யாக விலகி உள்​ளார்

பவர்​பிளே​வில் துல்​லிய​மாகப் பந்​து​வீசும் திறன் கொண்ட ஜோஷ் ஹேசில்​வுட் களமிறங்கவில்லை என்றால் அது ஆர்சிபி அணி​யில் பெரிய தாக்​கத்தை ஏற்​படுத்​தக்​கூடும். இடது கை வேகப்​பந்து வீச்​சாள​ரான யாஷ் தயாள், கடந்த சீசனில் இக்​கட்​டான நேரங்​களில் விக்​கெட்​டு​களை வீழ்த்தி உதவி​யிருந்​தார். தற்போதைய சூழ்நிலையில் சீனியர் வேகப்​பந்து வீச்​சாள​ரான புவனேஷ்வர் குமார், இடதுகை வேகப்​பந்து வீச்​சாள​ரான மங்​கேஷ் யாதவ், சுழற்​பந்து வீச்​சாளர்​களான கிருணல் பாண்​டி​யா, சுயாஷ் சர்மா ஆகியோரையே ஆர்​சிபி அணி நம்​பி​யிருக்க வேண்டியது உள்​ளது.

அதேவேளை​யில் சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​யில் கேப்​டன் பாட் கம்​மின்ஸ் காயம் காரண​மாக முதற்​கட்ட போட்​டிகளில் விளை​யாடுவது சந்தேகமாகி உள்ளது. அந்த அணி​யில் பிரைடன் கார்​ஸ், ஜெயதேவ் உனத்​கட், ஹர்ஷால் படேல், ஹர்ஷ் துபே ஆகியோரை உள்​ளடக்​கிய பந்​து​வீச்சு துறைக்கு இன்​றைய ஆட்​டம் கடும் சவால் நிறைந்​த​தாக இருக்​கக்​கூடும். பாட் கம்​மின்​ஸ், எப்​போது அணிக்கு திரும்​பு​வார் என்​பதும் தெளிவு படுத்தப்படவில்லை.

ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டு ஜூன் 4-ம் தேதி பெங்களூரு​வில் நடை​பெற்ற ஆர்​சிபி வெற்றி கொண்​டாட்டத்​தின் போது ஏற்​பட்ட கூட்ட நெரிசலில் உயி​ரிழந்த 11 ரசிகர்​களுக்கு அஞ்​சலி செலுத்​தும் வித​மாக, இந்த ஆண்டு தொடக்க விழா ரத்து செய்​யப்​பட்​டுள்​ளது. மைதானத்​தில் 11 இருக்​கைகள் அவர்​கள் நினை​வாக காலியாக வைக்​கப்​படும் எனவும் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Related Articles

Latest Articles