நானுஓயாவில் பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் படும் காயம்: சாரதி கைது!

நானுஓயா டெஸ்போட் பகுதியில் தலவாக்கலையிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த அரச பேருந்தில் ஏறுவதற்கு முற்பட்ட பெண் மிதிபலகையிலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (31) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மிதிபலகையில் இருந்து இவ்வாறு தவறி வீதியில் விழுந்த பெண்ணின் மீது பேருந்தின் சக்கரம் ஏறியதில் அவரது ஒரு காலில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பில் விசாரணை நடக்கின்றது.

Related Articles

Latest Articles