ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC), அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானிய தலைவர்கள் குறிவைத்துக் கொல்லப்பட்டால், அதற்குப் பழிவாங்க கூகுள், ஆப்பிள் மற்றும் டெஸ்லா உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை இலக்கு வைக்கப்போவதாக ஈரான் அறிவித்துள்ளது.
இந்த நிறுவனங்கள் பயங்கரவாதத் திட்டங்களுக்குத் துணைபோவதாகக் குற்றம் சாட்டியுள்ள ஈரான், அங்கு பணிபுரியும் ஊழியர்களை உடனடியாக வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளது.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களை தங்களின் நேரடி எதிரிகளாக ஈரான் தற்போது கருதுகிறது. பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ள இந்த மிரட்டல், அமெரிக்க நிறுவனங்களின் பாதுகாப்பு குறித்த பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இக்குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வெளியேறத் தவறினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ஈரான் தரப்பில் அச்சமூட்டப்பட்டுள்ளது.
