இத்தாலி அணியின் உலகக்கிண்ண கனவு கலைவு!

 

பிபா உலகக் கோப்பை கால்​பந்து தொடர் வரும் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை கனடா, அமெரிக்​கா, மெக்சிக்​கோ​வில் நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில் இந்த தொடருக்​கான ஐரோப்​பிய தகுதி சுற்​றின் பிளே ஆ ப் ஆட்டங்​கள் நடை​பெற்​றன.

இதில் போஸ்​னி​யா​வில் உள்ள ஜெனிகா நகரில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் 4 முறை சாம்​பிய​னான இத்​தாலி, தரவரிசை​யில் 66-வது இடத்​தில் உள்ள போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா அணி​யுடன் பலப்​பரீட்சை நடத்தி​யது.

15-வது நிமிடத்​தில் இத்​தாலி அணி​யின் மொயீஸ் கீன் கோல் அடித்து அசத்​தி​னார். இதனால் அந்த அணி 1-0 என முன்​னிலை பெற்​றது. 41-வது நிமிடத்​தில் இத்தாலி வீரர் அலெஸாண்ட்ரோ பாஸ்​டோனிக்கு ரெட் கார்டு வழங்​கப்​பட்​டது.

இதனால் இத்​தாலி அணி 10 வீரர்​களு​டன் விளை​யாடும் நிலைக்கு தள்​ளப்​பட்​டது. 79-வது நிமிடத்​தில் போஸ்னியா பதிலடி கொடுத்​தது. அந்த அணி​யின் வீரர் ஹாரிஸ் தபகோ​விச் கோல் அடிக்க ஆட்​டம் 1-1 என சமநிலையை எட்​டியது.

நிர்​ண​யிக்​கப்​பட்ட 90 நிமிடங்​களின் முடி​வில் ஆட்​டம் 1-1 என சமநிலை​யில் இருந்​தது. இதையடுத்து கூடு​தலாக 30 நிமிடங்​கள் வழங்​கப்​பட்​டது. இதில் இரு அணி​கள் தரப்​பில் மேற்​கொண்டு கோல் அடிக்​கப்​பட​வில்​லை. இதனால் வெற்​றியை தீர்​மானிக்க பெனால்டி ஷுட் அவுட் முறை கடைபிடிக்​கப்​பட்​டது.

இதில் போஸ்​னியா மற்​றும் ஹெர்​சகோ​வினா அணி 4-1 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்று உலகக் கோப்பை கால்​பந்து தொடருக்கு தகுதி பெற்​றது. அந்த அணி உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெறு​வது இது 2-வது முறை​யாகும். கடைசி​யாக அந்த கடந்த 2014-ம் முதன்​முறை​யாக உலகக் கோப்பை கால்​பந்து தொடரில் விளையாடி இருந்​தது.

அதேவேளை​யில் இத்​தாலி அணி தொடர்ச்​சி​யாக 3-வது முறை​யாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற முடி​யாமல் வெளி​யேறி உள்​ளது. அந்த அணி 2018 மற்​றும் 2022-ம் ஆண்டு நடை​பெற்ற உலகக் கோப்பை தொடருக்​கும் தகுதி பெற இல்​லை.

1934, 1934, 1982 மற்​றும் 2006-ம் ஆண்​டு​களில் சாம்​பியன் பட்​டம் வென்ற இத்​தாலி அணி தற்​போதைய தோல்​வி​யால் கால்​பந்​தின் மிகப்​பெரிய திரு​விழா​வில் 16 ஆண்​டு​களாக நுழைய முடி​யாமல் தவிப்பு நிலைக்கு தள்​ளப்​பட்​டுள்​ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles