பதிலடி! வளைகுடாவில் 8 பாலங்களை தகர்க்க ஈரான் திட்டம்!!

ஈ​ரானின் மிகப் பெரிய பாலத்தை அமெரிக்கா தகர்த்​த​தால், வளை​குடா நாடு​களில் உள்ள 8 பாலங்களை தகர்க்​கப்​போவ​தாக ஈரான் எச்​சரித்துள்ளது.

ஈரான் தலைநகர் டெஹ்​ரானை​யும், கராஜ் நகரை​யும் இணைக்​கும் வகை​யில் 136 மீட்​டர் உயரத்​துக்கு கட்​டப்​பட்டு வந்த பி1 என்ற பாலத்​தின் மீது அமெரிக்கா நேற்று குண்டு வீசி​யது.

இதில் பாலத்​தின் ஒரு பகுதி தகர்ந்​தது. இந்த தாக்​குதலில் 8 பேர் உயி​ரிழந்​தனர், 95 பேர் காயம் அடைந்​தனர்.

இது குறித்து சமூக ஊடகத்​தில் கருத்து தெரி​வித்த அதிபர் ட்ரம்ப்,

“‘ஈரானின் மிகப் பெரிய பாலம் தகர்க்​கப்​பட்​டது. அதை மீண்​டும் பயன்​படுத்த முடி​யாது.

அமெரிக்கா​வுடன் ஈரான் ஒப்​பந்​தம் செய்​யா​விட்​டால், ஈரானில் ஒன்​றும் இருக்​காது’’ என கூறி​யிருந்​தார்.

இதற்கு எக்ஸ் தளத்​தில் பதில் அளித்​துள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்​பாஸ் அராக்​சி, ‘‘பொது கட்​டமைப்​பு​கள் மீது தாக்​குதல் நடத்​து​வதன் மூலம் ஈரானியர்​களை சரணடைய வற்​புறுத்த முடி​யாது. இது எதிரி தோல்​வியடைந்​ததை​தான் காட்​டு​கிறது’’ என்​றார்.

இந்​நிலை​யில் குவைத்​தில் உள்ள ஷேக் ஜாபர் அல்​-அகமது அல்​-சபா கடல் பாலம், ஐக்​கிய அரபு அமீரகத்​தில் உள்ள ஷேக் சையது பாலம், அல் மக்தா பாலம் மற்​றும் ஷேக் கலிபா பாலம், சவுதி அரேபி​யா​வை​யும் – பஹ்ரைனை​யும் இணைக்​கும் தி கிங் பகத் பாலம், ஜோர்​டானில் உள்ள தி கிங் உசேன் பாலம், டா​மியா பாலம், மற்​றும் அப்​டான் பாலம் என 8 பாலங்களைத் தகர்க்​கப்​ போவ​தாக ஈரான்​ கூறி​யுள்​ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles