அமெரிக்காவுக்கு சொந்தமான இரு ராணுவ விமானங்களை ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ள நிலையில், அந்நாட்டில் பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது.
தென்மேற்கு ஈரான் மற்றும் ஹார்முஸ் நீரிணைப் பகுதிகளில் மேற்படி விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன எனக் கூறப்படுகின்றது.
இது மகத்தான வெற்றி எனக் கருதி ஈரான் மக்கள் தெருக்களில் கொண்டாடிவருகின்றனர்.
இது அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பின்னடைவு என ஈரான் மக்கள் கருதுகின்றனர்.
தங்களின் ராணுவ வலிமையைக் குறைத்து மதிப்பிட்டவர்களுக்கு இது ஒரு தகுந்த பதிலடி என்று ஈரான் அரசு பெருமிதம் கொண்டுள்ளனர்.
இந்தத் தாக்குதல் ஈரானிய ராணுவத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது எனவும போரைத் தொடர்ந்து எதிர்கொள்ளத் தாங்கள் தயார் என்பதையும் ஈரான் தரப்பு வெளிப்படுத்தியுள்ளது.
