நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது 10 ஆம் திகதி வாக்கெடுப்பு!

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீது எதிர்வரும் 10 ஆம் திகதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இதன்போது பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சர்வஜன அதிகாரம் உள்ளிட்ட கட்சிகள் தீர்மானித்துள்ளன.

எனினும், வடக்கு, கிழக்கை மையப்படுத்தி இயங்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் நிலைப்பாடு இன்னும் அறிவிக்கப்படவில்லை.

அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போதே இது தொடர்பில் அக்கட்சிகள் தீர்மானம் எடுக்கவுள்ளன.

அதேவேளை நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து, ஆளும் தேசிய மக்கள் சக்தி இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என்று, தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

கட்சி இன்னும் இறுதி நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்றும், அதன் தெரிவுகளை இன்னும் பரிசீலித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பதற்குரிய பெரும்பான்மை பலம் அரசு வசம் உள்ளது.

எனினும், நிலக்கரி மோசடி உள்ளிட்ட விடயங்களை அம்பலப்படுத்தும் நோக்கிலேயே பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

சிலவேளை, விவாதத்துக்கு முன்னர் எரிசக்தி அமைச்சர் பதவி விலகுவதற்குரிய சாத்தியமும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Latest Articles