ஈரான் போரை வேகமாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதில் அமெரிக்கா தீவிரமாக உள்ளது. இதற்காக, தற்போது அதிக சக்திவாய்ந்த ஜேஏஎஸ்எஸ்எம்-இஆர் ஏவுகணைகளை நிலைநிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
மற்ற நாடுகளின் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த கையிருப்புகளைக் குறைத்து, தனது முழு ஏவுகணை பலத்தையும் ஈரான் போருக்காக அமெரிக்கா திசை திருப்பிவிட்டுள்ளதாகவே தெரிகிறது.
அமெரிக்காவின் பசிபிக் பிராந்தியக் கிடங்குகளில் இருந்த சுமார் ரூ.13.91 கோடி (1.5 மில்லியன் டாலர்) மதிப்புள்ள இந்த ஏவுகணைகளை இடமாற்றம் செய்ய மார்ச் மாத இறுதியில் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்காவின் மையப்பகுதி மற்றும் பிரிட்டனின் ஃபேர்ஃபோர்டு தளங்களில் இருந்த ஏவுகணைகள் தற்போது மத்திய கட்டளைப் பிரிவின் (சென்ட்காம்) தளங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைக்குப் பிறகு, அமெரிக்காவிடம் இருந்த 2,300 ஏவுகணைகளில் வெறும் 425 மட்டுமே மற்ற உலக நாடுகளின் பயன்பாட்டிற்காக எஞ்சியிருக்கும். இது 17 பி-1பி போர் விமானங்கள் ஒரே ஒருமுறை தாக்குதல் நடத்துவதற்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.










