நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது இன்று வாக்கெடுப்பு!

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது நாடாளுமன்றத்தில் இன்று (10) விவாதம் நடத்தப்படவுள்ளது.

மேற்படி பிரேரணையை தோற்கடிப்பதற்குரிய பெரும்பான்மை பலம் ஆளுங்கட்சி வசம் இருப்பதால் அது தோல்வி அடையும் என்பது உறுதி.

எனினும், தரமற்ற நிலக்கரி இறக்குமதிமூலம் இடம்பெற்றுள்ள மோசடியை வெளிப்படுத்துவதே இதன் முதன்மை நோக்கம் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.

தரமற்ற நிலக்கரி கொள்வனவினால் அரசுக்கு பல கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது உட்பட மேலும் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தே வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணைமீது இன்று  (10) முற்பகல் 11.30 மணி முதல் மாலை  5.30 மணி வரை  விவாதம் நடத்தப்பட்டு, அதன்பின்னர் நம்பிக்கையில்லா பிரேரணைமீது வாக்கெடுப்பு நடத்தப்படும்.

Related Articles

Latest Articles