இஸ்ரேல் மற்றும் லெபனானுக்கு இடையிலான தற்காலிக போர் நிறுத்தத்தை ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் வரவேற்றுள்ளார்.
இந்த அமைதி முயற்சியை சாத்தியமாக்குவதற்கு பங்காற்றிய அமெரிக்காவுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
குறித்த தற்காலிக போர்நிறுத்தம் நிலையான அமைதி மற்றும் நீண்டகால தீர்வுகளை எட்டுவதற்கு ஒரு தொடக்கமாக அமையும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் இந்த ஒப்பந்தத்தை மதித்து, சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் எனவும் ஐ.நா. செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் லெபனானுக்கிடையிலான போர் நிறுத்தத்தை ஈரான் வரவேற்றுள்ளது.
எனினும், ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான போர் நிறுத்த முயற்சி இன்னும் இழுபறி நிலையிலேயே உள்ளது.
அதேவேளை, இஸ்ரேல் மற்றும் லெபனானுக்கு இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வரவேற்றுள்ளார்.
குறித்த நடவடிக்கை அப்பகுதியில் நிலையான அமைதிக்கு வழிவகுக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.










