“காலத்தை ஓட்டாதீங்க, ஊழல்வாதிகளை உள்ளே போடுங்கள்”

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு,

” அரசாங்க பேச்சாளர் நண்பர் நலிந்த என்ன உளறுறார்?

ராஜினாமா செய்த குமார ஜயக்கொடி தொடர்புல, “குற்றம் சாட்டிய எதிர் கட்சி எம்பீக்கள், ஜனாதிபதி விசாரணை குழு முன் சென்று தகுந்த சாட்சியங்கள முன் வைக்கலாம்” என சவால் விடறார்!

இந்த NPP ஆட்சிக்கு வருமுன் 450க்கும் மேற்பட்ட பைல்களை காட்டி ஊழலுக்கு எதிரா பிரசாரம் செய்தது!
அந்த பைல்கள் எங்கே?

நாமும் அததான் கூறுறோம்! நீங்க சொன்ன அந்த பைல் சாட்சியங்கள முன் வைய்யுங்க! வழக்கு தொடருங்க! ஊழல் அரசியலரை புடிச்சு உள்ளே போடுங்க!

ஒன்றரை வருஷங்களா கடந்த அரசாங்கம் போட்ட வழக்குகளால், கொண்டு வந்த சட்டங்களால் தான் காலத்த ஓட்டறீங்க!

இந்த நிலக்கரி ஊழல் தொடர்பில், அரசாங்க கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையிலேயே, தெளிவா சாட்சியங்கள் இருக்கே. ஜனவரி மாதத்திலேயே, முறைகேடுகள் நடக்க உள்ளன என்று கூறி நிலக்கரி நிறுவன முன்னாள் தலைவர் ராஜினாமா செய்தார்.

இவற்றுக்கு பொறுப்பேற்று அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தான் நாம் கோரினோம். நீங்க விடா பிடியாக மறுத்தீங்க.

இப்போ IMFல் இருந்து அழுத்தம் வந்ததும், ராஜினாமா செய்ய வைச்சு போட்டு, வாய் சவடால் வேறு அடிக்கறீங்க.
கள்ளரை புடிக்க வந்து, கீழே தடுக்கி உழுந்த கள்ளரின்
மீசையில் மண் ஒட்டலையாம்!” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles