கல்வியல் கல்லூரியில் பயிற்று, ஒன்லைன் மூலமாக விண்ணப்பித்திருந்த ஆசிரியர்களில் 335 பேருக்கு அவர்களின் சொந்த மாவட்டங்களில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கொவிட் நெருக்கடியினால் அவர்கள் ஒன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், இந்த ஆசிரியர்களுக்கு வெளி மாவட்டங்களில் நியமனங்கள் வழங்கப்படும் நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட நிலையில், இதுகுறித்து கடந்த இரண்டு வாரங்களாக கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி, குறித்த ஆசிரியர்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டங்களில் நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஊவா மாகாணத்தில் 53 ஆசிரியர்களுக்கும், மத்திய மாகாணத்தில் 188 ஆசிரியர்களுக்கும், சப்கரமுக மாகாணத்தில் 46 ஆசிரியர்களுக்கும், மேல் மாகாணத்தில் 48 ஆசிரியர்களுக்கும் அவர்களின் சொந்த இடங்களில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்னரும் கல்வியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு வெளிமாவட்டங்களில் நியமனங்கள் வழங்கப்பட்ட நிலையில், தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன், அப்போதைய மாகாண கல்வி அமைச்சராக இருந்த செந்தில் தொண்டமானின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட பின்னர், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கொவிட் நெருக்கடியினால் ஒன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்த ஆசிரியர்களுக்கும் வெளிமாவட்டங்களில் நியமனங்கள் வழங்கப்பட்ட நிலையில், இதுகுறித்த செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு, இதற்கான தீர்வு வழங்கப்பட்டுள்ளது.
தமது சொந்த மாவட்டங்களில் ஆசிரியர்களுக்கு நியமனங்கள் கிடைத்துள்ளதால் பொங்கலுக்குக் கிடைத்த இனிப்பான செய்தி இது என நியமனம் கிடைத்துள்ள ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.