ஐ.பி.எல்.தொடரில் இன்று நடைபெறும் 27 ஆவது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் இன்று (18) மோதுகின்றன.
இப்போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறும்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.
முதல் நான்கு போட்டிகளில் மூன்றில் தோல்வியடைந்த நிலையில் அந்த அணி கடைசியாக தனது சொந்த மைதானத்தில் கம்பீரமாக மீண்டு வந்தது.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் தோல்விகளை சந்தித்த போதிலும் அதில் இருந்து மீண்டு வந்து அடுத்தடுத்து 2 வெற்றிகளை பெற்றுள்ளது.
தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் பார்முக்கு திரும்பியிருப்பது அணியின் பலத்தை அதிகரித்துள்ளது.
டெல்லி அணிக்கு எதிராக சதம் விளாசிய சஞ்சு சாம்சன், கடைசியாக கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 48 ஓட்டங்கள்கள் எடுத்திருந்தார். அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும்.










