மாற்றம் வரும்: ஆட்சிக்கு வருவதற்கு பாரிய திட்டங்கள் உள்ளன

“மீண்டும் ஆட்சிக்கு வருவதற்குரிய  பாரிய திட்டங்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னெடுத்துள்ளது” என்று அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வுகளின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழல் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக, மக்களிடையே இம்முறை புத்தாண்டு உற்சாகம் காணப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மக்கள் பெரும் பொருளாதாரச் சுமைக்கு மத்தியிலேயே புத்தாண்டை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

இம்முறை மே தினம் வெசாக் போயா தினத்தில் வருவதால், அரசியல் ரீதியிலான மே தின ஊர்வலங்கள் அல்லது கூட்டங்களை நடத்தப் போவதில்லை என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

“மே தினத்துக்குப் பதிலாக அன்றைய தினம் நாம்  ஆன்மீக நிகழ்வுகளில் ஈடுபடத் தீர்மானித்துள்ளோம்.  ” என்றும் அவர் மேலும் தெளிவுபடுத்தினார்.

புதிய ஆண்டில் அரசியல் மாற்றங்கள் ஏற்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், நிச்சயமாக மாற்றங்கள் நிகழும் என்றும் தெரிவித்தார்.

மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான ஒரு பெரிய அளவிலான திட்டத்தைத் தமது கட்சி வைத்துள்ளது என்றும், வரவிருக்கும் எந்தவோர் அரசியல் சவாலையும் எதிர்கொள்ளத் தமது அணி தயாராக இருக்கின்றது என்றும் மஹிந்த ராஜபக்ச இதன்போது மேலும் கூறினார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles