போர் நிறுத்தம் நாளையுடன் நிறைவு: பாகிஸ்தான் பறக்கிறார் அமெரிக்க துணை ஜனாதிபதி!

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இன்று (21) பாகிஸ்தான் செல்லவுள்ளார் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான 2ஆம் கட்ட அமைதி பேச்சு இஸ்லாமாபாத்தில் நாளை (22) நடைபெறவுள்ளது எனவும், இதில் பங்கேற்பதற்காகவே வான்ஸ் அங்கு செல்கின்றார் எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும், தமது பிரதிநிதிகள் குழு பங்கேற்பதை ஈரான் இன்னும் உறுதிப்படுத்தவில்லை எனவும் மேற்படி ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான தற்காலிக போர் நிறுத்தம் நாளையுடன் (22) காலாவதியாகிறது.
இஸ்லாமாபாத்தில் கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற முதல் சுற்று பேச்சு தோல்வியில் முடிவடைந்தமை தெரிந்ததே.

Related Articles

Latest Articles