அமைதி பேச்சுக்கு ஈரான் நிபந்தனை விதிப்பு!

பொருளாதாரத் தடைகள் மற்றும் முற்றுகையை அமெரிக்கா விலக்கிக் கொண்டால் மட்டுமே, அமைதி பேச்சில் ஈரான் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நாவுக்கான ஈரானின் தூதுவர் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அமைதியான அரசியல் தீர்வு அல்லது போர்ச் சூழல் என எத்தகைய நிலைப்பாட்டையும் எதிர்கொள்ள ஈரான் தயாராகவே உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்கா தனது போர்நிறுத்த மீறல்களை நிறுத்தினால் மட்டுமே இராஜதந்திர உறவுகள் முன்னேறும் எனவும் ஈரான் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles