மும்பை, சென்னை அணிகள் இன்று மோதல்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 33ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இரவு 7.30 மணிக்கு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமாகும்.

தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த 2 ஆட்டங்களிலும் மும்பை அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா களமிறங்கவில்லை.

தற்போது காயத்தில் இருந்து குணமடைந்துள்ள அவர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் இன்றைய ஆட்டத்தில் அவர், களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.

கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த சீசனில் இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாடாத சிஎஸ்கே அணியின் சீனியர் நட்சத்திரமான தோனி, வான்கடே மைதானத்தில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

காயத்தில் இருந்து குணமடைந்துள்ள அவர் ‘இம்பாக்ட் பிளேயராக’ களமிறக்கப்படலாம் எனத் தெரிகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 ஆட்டங்களில் விளையாடி 4 தோல்வி, 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.

ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 6 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 4 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.

Related Articles

Latest Articles