ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி மற்றும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோருக்கு இடையில் முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானைத் தொடர்ந்து, தனது அடுத்தகட்ட பயணமாக ஓமன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்குச் சென்று அந்நாட்டுத் தலைவர்களுடன் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் பேச்சு நடத்தவுள்ளார்.
சர்வதேச அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில் ஈரானின் இந்தத் தொடர்ச்சியான பயணங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.










