ஹட்டனில் மே 1 சித்தர் யாகம்!

ஓம் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர ஆஸ்ரமத்தின் குருநாதர் சுவாமி கணபதி அவர்களின் ஆசியுடன் எதிர்வரும் 01.05.2026 அன்று மாபெரும் சித்தர் யாகமும் அதனைத் தொடர்ந்து 02.05.2026 திருவாசகம் முற்றோதல் நிகழ்வும் இடம்பெற இருக்கிறது.

சுவாமி கணபதி யோகி அவர்கள் ஹட்டன் பிரதேசத்தில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக இறைப்பணியை ஆற்றி சிவ வழிபாட்டின் அவசியத்தையும் சிவ வழிபாட்டின் ஒரு ஊன்றுகோலாக நிலைநாட்டியவர் என்பது மறுக்க முடியாத உண்மை.

அவரது வழிகாட்டலில் அவரது பக்தர்கள் அவரது அடியார்கள் இன்னமும் இலங்கையின் பல்வேறு இடங்களில் உலகத்தின் பல்வேறு இடங்களில் சிவ வழிபாட்டினை தொடர்ந்து கொண்டு வருகிறார்கள்.

அவர் இலங்கையிலே எந்தெந்த இடத்திலே சிவலிங்கம் வைக்க சொன்னார் என்பது அந்தந்த இடங்களில் சிவலிங்கம் வைக்கப்பட்டு வருகிறது அண்மையில் இது குறித்த ஒரு பதிவும் வெளியிடப்பட்டிருந்தது.

ஹட்டன் பிரதேசத்தில் சிவ வழிபாட்டுக்கு வழி கூறியவர்களின் சுவாமி கணபதி யோகி முக்கியமானவர். அவரது ஜீவசமாதி அவரினால் நிர்மாணிக்கப்பட்ட இலிங்க நகர் எனும் பதியில் ஹட்டன் றொத்தஸ் பிரதேசத்தில் இலிங்கநகர் எனப்படும் இடத்தில் ஓம் ஸ்ரீ ராஜராஜேஸ்வர ஆசிரமத்தில் அமைந்துள்ளது.

எம்பெருமான் ராஜராஜேஸ்வரர் ராஜராஜேஸ்வரி அன்னையுடன் இணைந்து அந்த இடத்திலே வீற்றிருந்து அருள் பாலித்து வருகிறார்கள்.

ஹட்டன் சிவன் கோயில் என்று எல்லோராலும் அழைக்கப்படுகின்ற இவ் ஆச்சிரமம் இன்றளவும் அவர் செய்த பணிகளை தொடர்ந்து அவரது வழித்தோன்றல்களினால் செய்யப்பட்டு வருகின்றது.

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தின பூஜை என்பது ஹட்டன் சிவன் கோயிலிகல் கூட்டம் நிரம்பி வழியுமம. தினம் தோறும் யார் எந்த நேரத்தில் சென்றாலும் அவர்களுக்கு அன்னதானம் வழங்கி அவர்கள் பசியாற்றுவதே அந்த ஆசிரமத்தின் மிக முக்கியமான செயல்பாடு சுவாமி கணபதி ஓகே ஆரம்பித்து வைத்தது இதுவரையிலும் அது நடந்து கொண்டிருக்கிறது.

அவருடைய சமாதிக்கு பிறகு அவர் வழிவந்த அவருடைய சகோதரனின் மகன்மார் எடுத்து ஆஸ்ரமத்தை நடத்திக் கொண்டு வருகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாதமும் நடைபெறுகின்ற மாத பௌர்ணமி தின பூசைகள் பிரதோஷ பூஜைகள் மகா சிவராத்திரி போன்ற விசேஷமான நாட்களில் யாகம் நடைபெற்று அநேக மக்களுக்கு கலந்து கொள்கின்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கி அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்று வருவது வழக்கம்.

அந்த வகையில் சித்தர்கள் பூமிக்கு வருகின்ற முக்கியமான நாட்களில் ஒன்றாக கருதப்படுகின்ற சித்தர் பௌர்ணமி எனப்படும் சித்ரா பௌர்ணமி அன்று பல சஞ்சீவினி மூலிகைகளைக் கொண்ட மகா சித்தர் யாகம் பதினெண் சித்தர்களும் ஈழத்து சித்தர்களும் சந்நிதி கொண்டிருக்க கூடிய இந்த ஆஸ்ரமத்தில் நடைபெற இருக்கிறது.

எதிர்வரும் மே மாத முதலாம் திகதி சித்ரா பௌர்ணமி அன்று காலை 9 மணி முதல் இந்த யாகங்கள் ஆரம்பிக்கப்படும்.

மிகச் சிறப்பாக நடைபெற இருக்கின்ற இந்த மகா வேள்வியினை சுவாமி கணபதி யோகி அவர்களின் சகோதரர் மகன் குணசீலன் தலைமையேற்று நடத்துகிறார்.

அவரோடு இணைந்து இவ்வேள்வியை நடத்துவதற்காக சுவாமி சிவானந்த பரஹம்சர் வழிவந்த காஞ்சிபுரம் சிகாரம் சைவ நெறி பாடசாலையினை நிர்வகித்து நடத்தி வருகின்ற பிரம்மஸ்ரீ மாணிக்க நடராஜன் சுவாமிகள் அவர்களும் இணைந்து இந்த மகாசித்தர் வேள்வியை நடாத்த இருக்கின்றனர்.

அதனை தொடர்ந்து 02.05.2026 அன்று காலை 9 மணி முதல் ஆஸ்ரமத்தில் திருவாசகம் முற்றோதலும் இடம்பெற இருக்கிறது. பிரம்மஸ்ரீ மாணிக்க நடராஜர் சுவாமிகள் ஐயா இந்த திருவாசகம் முற்றோதலை தலைமையேற்று நடத்தி தருகிறார்.

நடைபெறுகின்ற சித்தர் யாகத்திலும், திருவாசகம் முற்றோதலிலும் அடியார்கள் அனைவரும் கலந்து கொண்டு அங்கு குடிகொண்டிருக்கின்ற சித்த புருஷர்களினதும், எம்பெருமான் ராஜராஜேஸ்வரர் பூரண ஆசியையும் அம்பாள் ராஜராஜேஸ்வரி தாயாரின் அனுக்கிரகத்தையும் பெற்று வாழ்க்கையில் பல நலன்களையும் பெற அனைவரையும் அன்புடன் அழைக்கிறார்கள் ஓம் ஸ்ரீ ராஜராஜேஸ்வர ஆஸ்ரமத்தினர் அனைவரும் வருக குரு அருளும் திருவருளும் ஒருங்கே பெற்று செல்க.

ஓநமசிவாய சிவாய நமஹ

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles