ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் பாகிஸ்தானில் நடைபெறவிருந்த 2ஆம் கட்ட பேச்சுவார்த்தையை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திடீரென ரத்து செய்துள்ளார்.
ஈரான் தலைவர்களிடையே நிலவும் குழப்பமே இதற்குக் காரணம் எனக் கூறியுள்ள ட்ரம்ப், பேச்சுவார்த்தைக்கு ஈரான் தரப்பிலிருந்து முறையான அழைப்பு வரட்டும் எனத் தெரிவித்துள்ளார்.
தற்காலிக போர் நிறுத்தம் அமுலில் இருந்தாலும் ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் மோதல் மற்றும் எண்ணெய் ஏற்றுமதித் தடைகளால் இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகின்றது.
இந்நிலையில் நேரடிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாதது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்ற முதல்சுற்று பேச்சு தோல்வியில் முடிவடைந்தது.
இதனால் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வைப்பதற்கு மத்தியஸ்தம் வகிக்கும் பாகிஸ்தான் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ட்ரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.










