ஹட்டன் பகுதி விபத்து: ஒருவர் பலி: மேலும் இருவர் கவலைக்கிடம்! (update)

 

மலைவாஞ்சான்

தனியார் பஸ்ஸொன்று சுமார் 25 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் 27 பேர் காயமடைந்துள்ளனர்.

படுகாயம் அடைந்தவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த இருவர் கண்டி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா , போடைஸ் பிரதான வீதியில் பட்டல்கலை பாலத்திற்கு அருகாமையிலேயே இன்று பிற்பகல் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

டயகமவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த பஸ்ஸொன்றே, மற்றொரு பஸ்ஸிற்கு வழிவிட முற்பட்டபோது, கட்டுப்பாட்டை இழந்த இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்களை பிரதேசவாசிகள் , பொலிஸார். இணைந்து மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மலைவாஞ்சான்

 

Related Articles

Latest Articles