முப்பையை வீழ்த்துமா சி.எஸ்.கே?

IPL 2026 தொடரில் இன்றிரவு நடைபெறும் 44 ஆவது லீக் ஆட்டத்தில் சி.எஸ்.கே, மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமாகும்.

ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமாக திகழ்ந்த மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே ஆகிய இரு அணிகளும், நடப்பு சீசனில் தடுமாறி வருகின்றன. இது மேற்படி அணிகளின் ரசிகர்களை சோகத்தில் மூழ்கடித்துள்ளது.

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி 8 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 5 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

கடைசியாக சிஎஸ்கே அணி, குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது.

ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 8 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 6 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது.

Related Articles

Latest Articles