தமிழகத்தை ஆளப்போவது யார்? இன்று முடிவு அறிவிப்பு!

தமிழகத்தை ஆளப்போவது யார் என்ற வினாவுக்கு இன்று விடை கிடைக்கப்பெறவுள்ளது.

வாக்கெண்ணும் நடவடிக்கை இன்று (4) காலை 8 மணிக்கு அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி ஒரே கட்டமாக நடைபெற்றது.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.

இதற்காக தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

முற்பகல் 11 மணி முதல் முன்னிலை நிலவரங்கள் தெளிவாக தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வ முடிவுகள் மாலை முதல் மாலை முதல் நள்ளிரவு வரை வெளியாகலாம். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையின் அதிகாரப்பூர்வ முடிவுகளும் தேர்தல் நடத்தும் அதிகாரியால் வெளியிடப்படும்.

தமிழகத்தில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். 5.73 கோடி வாக்காளர்களில் 4.88 கோடி பேர் வாக்களித்துள்ளனர்.

Related Articles

Latest Articles