ஹைதராபாத் அணியை வீழ்த்தியது கொல்கத்தா

ஐபிஎல் தொடரில் நேற்று ஹைத​ரா​பாத்​தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் – கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி​கள் மோதின.

முதலில் பேட் செய்த ஹைத​ரா​பாத் அணிக்கு டிரா​விஸ் ஹெட் அதிரடி தொடக்​கம் கொடுத்​தார். வைபவ் அரோரா வீசிய 2-வது ஓவரில் டிரா​விஸ் ஹெட் 4 பவுண்​டரி​களை விளாசி அசத்​தி​னார். தொடர்ந்து சுனில் நரைன் வீசிய 3-வது ஓவரில் தலா ஒரு சிக்​ஸர், பவுண்​டரி விரட்​டி​னார் டிரா​விஸ் ஹெட்.

அதேவேளை​யில் நிதான​மாக விளை​யாடிய அபிஷேக் சர்மா 10 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், ஒரு பவுண்​டரி​யுடன் 15 ரன்​கள் எடுத்த நிலை​யில் கார்த்​திக் தியாகி 144 கிலோ மீட்​டர் வேகத்​தில் பேக் ஆஃப் தி லென்ந்த்​தில் வீசிய பந்தை விளாச முயன்ற போது மிட்விக்​கெட் திசை​யில் நின்ற கேமரூன் கிரீனிடம் கேட்ச் ஆனது.

முதல் விக்​கெட்​டுக்கு அபிஷேக் சர்​மா, டிரா​விஸ் ஹெட் ஜோடி 3.4 ஓவர்​களில் 44 ரன்​கள் சேர்த்​தது. இதையடுத்து இஷான் கிஷன் களறிமிங்​கினார். கேமரூன் கிரீன் வீசிய 5-வது ஓவரில் டிரா​விஸ் ஹெட் தொடர்ச்​சி​யாக 3 பவுண்​டரி​கள் அடித்​தார். மறு​புறம் கார்த்திக் தியாகி வீசிய 6-வது ஓவரில் இஷான் கிஷன் தலா ஒரு பவுண்​டரி, சிக்​ஸர் பறக்​க​விட்​டார். இதனால் பவர்​பிளே​வில் ஹைத​ரா​பாத் அணி 71 ரன்​கள் குவித்​தது.

வருண் சக்​ர​வர்த்தி வீசிய 7-வது ஓவரில் டிரா​விஸ் ஹெட் தலா ஒரு பவுண்​டரி, சிக்​ஸர் விளாசி​னார். மட்​டையை சுழற்​றிய டிரா​விஸ் ஹெட் 28 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 9 பவுண்​டரி​களு​டன் 61 ரன்​கள் விளாசிய நிலை​யில் வருண் சக்​ர​வர்த்தி பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். டீப் மிட்விக்​கெட் திசை​யில் டிரா​விஸ் ஹெட் அடித்த பந்தை கேமரூன் கிரீன் கேட்ச் செய்​தார். 2-வது விக்​கெட்​டுக்கு டிரா​விஸ் ஹெட், இஷான் கிஷன் ஜோடி 61 ரன்​கள் சேர்த்​தது.

இதன் பின்​னர் அந்த அணி ஆட்​டம் கண்​டது. ஹெய்ன்​ரிச் கிளாசன் 11 ரன்​கள் எடுத்த நிலை​யில் கேமரூன் கிரீன் வீசிய ஷாட் பிட்ச் பந்தை டீப் மிட்விக்​கெட் திசை​யில் விளாசி​னார்.

அப்​போது மின்​னல் வேகத்​தில் ஓடிவந்த ரோவ்​மன் பவல் அந்​தரத்​தில் பாய்ந்​த​படி டைவ் அடித்து கேட்ச் செய்​தார். இந்த கேட்ச் வியக்க வைக்​கும் வகை​யில் அமைந்​தது.

இதைத் தொடர்ந்து ரவிச்​சந்​திரன் சமரன் 4, அனிகேத் வர்மா 6, சலில் அரோரா 2 ரன்​களில் நடையை கட்​டினர். சீராக விளை​யாடி வந்த இஷான் கிஷன் 29 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 4 பவுண்டரிகளு​டன் 42 ரன்​கள் எடுத்த நிலை​யில் சுனில் நரைன் பந்தை லாங்க் ஆஃப் திசை​யில் விளாசிய போது அனுகுல் ராயிடம் கேட்ச் ஆனது.

இதைத் தொடர்ந்து பாட் கம்​மின்ஸ் 10, ஷிவங்க் குமார் 1, ஹர்​ஷால் படேல் 6 ரன்​களில் நடையை கட்​டினர். இதனால் சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி 19 ஓவர்​களில் 165 ரன்​களுக்கு ஆட்டமிழந்​தது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles