IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 47 ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேற்று மோதின.
மும்பை இந்தியன்ஸ் அணி நேற்றைய போட்டியிலும் ஒரு கட்டத்தில் தோற்று விடும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.
நிகோலஸ் பூரன் 21 பந்துகளில் 63 ஓட்டங்களை விளாசிய போது மும்பை அணி கையைப் பிசைந்து கொண்டு நின்றது. அப்படியே விட்டிருந்தால் லக்னோ 250 ஓட்டங்களை எடுத்திருக்கும்.
எனினும், பந்துவீச்சில் மும்பை இந்தியன்ஸ் டைட் ஆக்கி கடைசி 3 ஓவர்களில் ஒரு பவுண்டரியை மட்டுமே கொடுத்ததில் லக்னோ ஸ்கோர் 229 ஆக மட்டுப்படுத்தப்பட்டது.
காயத்திலிருந்து மீண்டு திரும்பிய ஹிட் மேன் ரோஹித் சர்மா, ரியான் ரிக்கிள்டன் தொடக்க ஜோடி 11 ஓவர்களில் 143 ஓட்டங்கள் என்ற அதிரடி தொடக்கம் கொடுத்தது.
ரோஹித் சர்மா 44 பந்துகளில் 6 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 84 ரன்களையும் ரியான் ரிக்கிள்டன் 32 பந்துகளில் 6 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் 83 ரன்களையும் விளாசினர்.
இறுதியில் 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 229 ஓட்டங்களைப் பெற்று மும்பை வெற்றிபெற்றது.
கடைசியில் 3 தொடர் தோல்விகளுக்குப் பிறகு மும்பை அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைத்துள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6வது தொடர் தோல்வியைச் சந்தித்தது.










