ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் 51 ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும்.
அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி 10 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 6 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.
அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பெற வேண்டுமானால் இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது.
அஜிங்க்ய ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 9 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம், 5 தோல்விகள் என 7 புள்ளிகள் பெற்று பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.










