2025 ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி விருதுகள் (National Education Awards – 2025) வழங்கும் நிகழ்வில், பாடசாலைப் பிரிவில் ‘சிறந்த சமூக ஈடுபாட்டிற்கான’ (Community Engagement Award) விருதை நு/ ஆதித்யா தமிழ் வித்தியாலயத்தைச் சேர்ந்த ஆசிரியர் தியாகராஜா நீலன் வென்றுள்ளார்.
ஒவ்வொரு மாகாணத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தி வழங்கப்பட்ட இந்த கௌரவத்தில், மத்திய மாகாண மட்டத்தில் சிறந்த சமூகத்தை ஈடுபடுத்திக் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்தமைக்காக அவருக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
லயத்து வாழ்விலிருந்து தேசிய விருது வரை
ஒரு சாதனைப் பயணம்
வட்டகொட, யொக்ஸ்போர்ட் பிரிவைச் சேர்ந்த தியாகராஜா நீலன் , ஒரு பின்தங்கிய தோட்டப் பிரதேசமான லயக் குடியிருப்பில் இருந்து கல்வி கற்று, இன்று தேசிய மட்டத்தில் விருது பெறும் நிலைக்கு உயர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்:
“மிகவும் பின்தங்கிய ஒரு பிரதேசத்திலிருந்து, லயத்திலிருந்து வந்து இன்று இந்த தேசிய விருதினைப் பெறுவதில் பெருமிதம் அடைகின்றேன். இந்த வெற்றியை எனது வழிகாட்டியான எனது தந்தைக்கு சமர்ப்பிக்கின்றேன்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
தியாகராஜா நீலனின் கல்வித் தகைமைகள் மற்றும் கல்விப் பின்னணி
ஆரம்பக் கல்வி: நு/யொக்ஸ்போர்ட் தமிழ் வித்தியாலயம்.
உயர்கல்வி (O/L & A/L): நு/வட்டகொட தமிழ் வித்தியாலயம்.
பட்டப்படிப்பு: பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி இளமாணி (BA) பட்டம்.
பட்டமேற்படிப்பு: இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் கல்விக்கான பட்டமேற்படிப்பு டிப்ளோமா (PGDE).
பின்தங்கிய பிரதேச மாணவர்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழும் ஆசிரியர் தியாகராஜா நீலனுக்கு பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
