குஜராத் அணி அபார வெற்றி!

2026 ஐபிஎல் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 52-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 77 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

ஜெய்ப்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் பந்து வீச முடிவு செய்தது.

இதற்கமைய துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 229 ஓட்டங்களைப் பெற்றது.

230 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி , 16.3 ஓவர்களில் 152 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம் குஜராத் அணி 77 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
குஜராத் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான், 4 ஓவர்கள் வீசி 33 ரன்கள் கொடுத்து, 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
ஆட்ட நாயகன் விருதை அவர் வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறி உள்ளது. தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் குஜராத் வெற்றி பெற்றுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles