கட்டுரையாளர் – : வேலு இந்திரசெல்வன்
‘நேர்படப் பேசு’ – இது மகாகவி பாரதியின் கொள்கை மட்டுமல்ல ,இன்று நுவரெலியா மாவட்டத்தின் அலகல தோட்ட மக்களின் அபயக் குரலுமாகும். ஹங்குரன்கெத்த பிரதேச சபைக்குட்பட்ட 508 B கிராமசேவகர் பிரிவில்இ அபாயகரமான கற்பாறைகளின் மேல் அமைந்துள்ள இந்தத் தோட்டத்தில், 55 குடும்பங்கள் எப்போது என்ன நடக்குமோ என்ற மரண அச்சத்திலேயே பொழுதைக் கழிக்கின்றனர்.
முடக்கப்பட்ட போக்குவரத்தும் முறிந்துபோகும் கல்வியும்
அலகல தோட்டத்தைப் பொறுத்தவரை எந்தத் திசையிலிருந்து வெளியேற முயன்றாலும், மக்கள் 3 கி.மீ தூரம் நடந்தே செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கடந்த 70 வருடங்களாகத் தடையின்றி இயங்கிய கோணப்பிட்டி – நுவரெலியா பஸ் சேவை, ‘டித் வா’ புயலுக்குப் பின்னர் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அவசர மருத்துவத் தேவைகளுக்காகக் கூட நோயாளிகளைச் சுமந்து செல்லும் அவலம் தொடர்கிறது.
இப்பகுதி மாணவர்கள் பாடசாலை செல்ல ஒரு நாளைக்கு 500 முதல் 600 ரூபா வரை தனியார் வாகனங்களுக்குச் செலவிட வேண்டியுள்ளது. சாதாரண தொழிலாளர் குடும்பங்களுக்கு இது எட்டாத சுமை என்பதால், உயர்தர மாணவர்கள் கல்வியைக் கைவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மறுபுறம், 3 கி.மீ தொலைவில் உள்ள தேயிலைக் காணிகளில் உழைக்கும் மக்கள், ஒரு கிலோவுக்கு வெறும் 100 ரூபா மட்டுமே ஊதியமாகப் பெறுகின்றனர். இந்த வறுமையால் குழந்தைகளும் முதியவர்களும் தேயிலைத் தோட்டப் பணிக்குச் செல்லும் அவலநிலை உருவாகியுள்ளது.
நிர்வாகத்தின் பாரபட்சமும் வாழ்வாதாரச் சிதைவும்
வீதி வசதி இல்லாததால், பல தலைமுறையாக மக்கள் வளப்படுத்திய 105 ஏக்கர் கோப்பி நிலங்கள் இன்று காடுகளாக மாறி வருகின்றன. விளைச்சலைச் சந்தைக்குக் கொண்டு செல்ல முடியாத மக்களின் கண்ணீர் ஒருபுறமிருக்க, நிர்வாகத்தின் பாரபட்சம் அம்மக்களை இன்னும் நோகடிக்கிறது.
குறிப்பாக, மத்துரட்ட பகுதிகளில் வசிக்கும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு 25,000 ரூபா வாடகை பணம் அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. ஆனால், அதே அனர்த்த அச்சுறுத்தலில் உள்ள, சொந்த நிலமற்ற அலகல தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்த வாடகை கொடுப்பனவு மறுக்கப்படுகிறது.
தற்காலிக கூடாரங்களும் நிர்வாகத்தின் அழுத்தங்களும்
தற்போது மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள 16 குடும்பங்கள் தற்காலிக கூடாரங்களில் தங்கியுள்ளனர். அடிப்படை வசதிகளற்ற இந்தச் சூழலில் அவர்கள் படும் துயரம் ஒருபுறமிருக்க, அதிகாரிகள் மற்றும் நிர்வாகத் தரப்பினர் அவர்களை மீண்டும் அந்தப் பாதிக்கப்பட்ட பாதுகாப்பற்ற சூழலுக்கே திரும்புமாறு மறைமுக அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றனர். இது மக்களின் பாதுகாப்பைத் துச்சமாக மதிக்கும் மனிதாபிமானமற்ற செயலாகும்.
உழைப்பும் கடனும் மிஞ்சிய லயன் வாழ்க்கை
இங்கு வாழும் மக்கள் 60 வயது வரை தோட்டங்களில் கடினமாக உழைத்து ஓய்வு பெற்றவர்கள். தாங்கள் பணிபுரிந்த காலத்தில் வீட்டுக்கடன் பெற்றுஇ லயன் வீடுகளைச் சிறிய அளவில் திருத்தங்கள் மேற்கொண்டு வாழ்ந்து வந்தனர். ஆனால்இ இன்று ‘டித்துவா’ புயல் காரணமாக அந்தச் சூழல் வாழ்வதற்கே பொருத்தமில்லாத ஒன்றாக மாறியுள்ளது. இச்சூழலில்இ தோட்டத்தில் பணிபுரியாத அடுத்த தலைமுறைக்கு வீடுகளையோ நிலத்தையோ வழங்க தோட்டக் கம்பனிகள் மறுப்பதுஇ அம்மக்களின் வாழ்வாதாரத்தை மிக மோசமாகப் பாதித்துள்ளது.
அரசாங்கத்திடம் முன்வைக்கும் கோரிக்கைகள்
பெருந்தோட்ட மக்கள் இந்நாட்டின் இரண்டாம் தரக் குடிமக்கள் அல்ல. அலகல தோட்ட மக்களின் இந்தக் கண்ணீர் வெறும் வேண்டுகோள் அல்ல; அது தங்களின் அடிப்படை உரிமைக்கான உரத்த குரல்!
நிரந்தரத் தீர்வு: அனர்த்த அபாயத்தில் உள்ள அனைவருக்கும்இ குறிப்பாகக் கூடாரங்களில் வாழும் 16 குடும்பங்களுக்கும் பொருத்தமான மாற்று இடத்தில் காணி உறுதியுடன் கூடிய வீடுகளை அமைத்துக்கொடுக்க வேண்டும்.
அடிப்படை வசதி: நிறுத்தப்பட்ட பஸ் சேவையை உடனடியாக ஆரம்பிப்பதுடன்இ மத்துரட்ட பகுதிக்கு வழங்கப்படுவது போல இவர்களுக்கும் 25இ000 ரூபா வாடகை கொடுப்பனவை பாரபட்சமின்றி வழங்க வேண்டும்.
அரசியல் கடமை: தற்போதைய அரசாங்கம் தேர்தல் மேடையாக இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தாதுஇ சுயதீன ஆய்வுகளைச் செய்து பாரபட்சமின்றித் தீர்வு காண வேண்டும். ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கட்சிப் பேதமின்றி மக்களுடன் இணைந்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
தோட்டக் கம்பனிகளிடமும் அரச சார்பற்ற நிறுவனங்களிடமும் பொறுப்பைத் தட்டிக்கழித்துவிட்டு அரசாங்கம் மெத்தனமாக இருக்க முடியாது. அலகல மக்களின் நீதிக்கான போராட்டத்தில் நாம் அனைவரும் துணை நிற்க வேண்டும்.
நன்றி – தமிழன்

